சங்க காலத்தை பற்றி நாம் நமது இலக்கிய நூல்களிலிருந்தே அறிகிறோம். எனவே "சங்கத் தமிழ் இலக்கியங்களில் கடவுளைப் பற்றி கூறியிருக்கிறதா?" என்ற வினாவினைக் கொண்டே இந்த விடையை அணுகுவதே சரி.
சங்க இலக்கியங்கள் யாவை?
முதலில், இந்த வினாவிற்கு விடையை அறிந்து கொள்வோம். பொதுவாக, எட்டுத்தொகை மற்றும் பத்துப் பாட்டு ஆகியவை. சிலர் பதினெண் கீழ் கணக்கு நூல்களையும் சேர்ப்பதுண்டு.
இவற்றில் கடவுளரைப் பற்றி கூறப்பட்டுள்ளதா?
இந்த இலக்கிய நூல்கள் பலவும் கடவுள் வாழ்த்தைக் கொண்டு தொடங்குகின்றன. இவற்றில் அந்தந்த கடவுளரின் உருவ அமைப்பை விவரிக்கின்றன. உதாரணமாக புறநானூற்றின் வாழ்த்துப் பாடல், சிவபெருமானை விடையேறும் கடவுளாகக் கூறுகின்றது. இன்றும் நாம் சிவபெருமானை நந்தி வாகனனாகவே வழிபடுகிறோம்.
எனில், யார்?
சங்கத் தமிழ் இலக்கியங்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) பல இடங்களில் கடவுளரை பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. சிலவற்றை பகிர்கிறேன்:
எட்டுத்தொகை:
1. அகநானூறு கடவுள் வாழ்த்துப் பாடல்:
ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே (பரமசிவனார்)
2. புறநானூறு பாடல் 56
ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் (பரமசிவனார்)
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் (பலராமன்)
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் (திருமால்)
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென (முருகன்)
3. பரிபாடல் பாடல் 1 முதல் 3
இப்பாடல்களில் திருமாலின் வருணனை இடம்பெற்றுள்ளது. மார்பில் (கௌஸ்துபம் என்று அறியப்படும்) மணியை அணிந்தவர் என்றும், திருமகளை தனது திருமார்பில் தாங்கியவர் என்றும் மற்றும் பல அவதாரங்களை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
3. கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல்:
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:
படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
கலித்தொகையில் வாழ்த்துப் பாடல் சிவபெருமானின் கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் ஆகிய திருநடனங்களை பற்றி உரைக்கிறது. மேலும் முதல் கலியான பாலைக் காலையிலும் முக்கண்ணன் குறிப்பிடப்படுகிறார்.
சங்ககாலத்தை சற்றே தாண்டி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளன (இவற்றை சங்க கால நூல்களாகக் கருதுவோரும் உண்டு).
பத்துப்பாட்டு:
4. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை முழுவதுமே கந்தவேளாம் முருகனைப் பற்றியதாகும். இதில் குறிப்பாக அடிகள் 89 முதல் 102 வரை முருகனது ஆறு முகங்களைப் பற்றிய விளக்கம் இடம்பெற்றுள்ளது.
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்;
ஒரு முகம், ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;
ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே;
ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே;
ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே;
ஒரு முகம் குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;
5. நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்து:
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம். உரை
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின்
அருமை அழித்த மகன்.
விளம்பி நாகனார் திருமாலின் சக்கரத்திற்கு ஞாயிறையும், அவரது திருமுகத்திற்கு திங்களை ஒப்பிட்டு, திருமால் தனது அடியால் மூவுலகைத் தாண்டியமை, குன்றெடுத்து ஆவினங்களையும் ஆயர்களையும் காத்தமை ஆகிய நிகழ்வுகளை இந்த கடவுள் வாழ்த்து செய்யுளில் பதிகிறார்.
மேலும் திரிகடுகத்தில் வாமனன், கண்ணனின் வருணனை, பிற்காலத்தே வந்த சிலப்பதிகாரத்தில் ஆயர்குரவை என இன்னமும் கூறிக்கொண்டே போகலாம்.
ஆக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த மேற்கோள்களைக் காணுங்கால், சங்க இலக்கியங்களில் சிவபெருமான், திருமால், முருகன் போன்ற கடவுளரின் வருணனைகள் கொட்டி கிடக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.