Sunday, December 23, 2012

கற்பழிப்புகள் நடப்பது ஏன்?

முதலில் நான் சொல்ல விரும்புவது - புது தில்லியில் நடந்தது ஒரு கொடுமையான சம்பவம். அதை குறித்து பேசி பெயர் வாங்குவது அல்ல இந்த பதிவின் நோக்கம். "கற்பழிப்புகள் ஏன் நடக்கின்றன? அவற்றை தடுக்க நம்மால் முடியுமா?" என்ற எனது சிந்தனையின் விளைவே இந்த பதிவு.

பொதுவாக ஆண்களிடம் பெண்கள் நமக்கு கீழ்பட்டவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இதிலே நாடு, மதம், இனம் என்ற வேறுபாடுகள் கிடையாது. உதாரணமாக, பெண்கள் மிகவும் முன்னேறியவர்கள் என்று நாம் கருதும் மேலை நாடுகளில் கூட, திருமணத்திற்குப் பிறகு கணவனின் குடும்பப் பெயர் (surname or last name), மனைவியின் குடும்பப் பெயராக அமைகிறது. இந்த எண்ணத்தின் விகாரமற்ற வடிவம் மேலை நாடுகளில் உள்ள "பெண் விடுதலை" (அங்கேயும் குடும்பப் பெயர்கள் மாறுகின்றன என்பதை கவனிக்கவும்). இந்த எண்ணம் சற்று கடினமான குணமாக மாறும் பொழுது தவறான எண்ணங்களும், பெண்கள் போக பொருட்கள் என்ற எண்ணமும் உருவாகிறது. 

இதற்கு சினிமாவும், மீடியாவும் முக்கிய காரணம். இவர்கள் என்ன தான் "மக்கள் ரசிக்கிறார்கள், அதைதான் நாங்கள் படமாகவும், நெடும் தொடராகவும் எடுக்கிறோம்" என்று கூறினாலும் செய்வது தவறுதான். சினிமாக்களில் item song என்பது ஒரு நிரந்தர பகுதி ஆகி விட்டது.  எத்தனையோ நெடும் தொடர்களில், திருமணத்திற்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வது,  சின்ன வீடு செட்டப் செய்து கொள்வது என்பது சாதாரணம். இவ்வளவு ஏன், நமது உடல் நாற்றத்தை தடுக்கவும், ஆரோக்கியத்திற்கு உதவும் Body Spray கூட, பெண்களை (அதுவும் பிற திருமணமான பெண்களை கூட) கவரும் ஒரு சாதனம் என்ற அளவில் விளம்பரம் செய்ய படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தினமலர் வாரமலரில் "இது உங்கள் இடம்" பகுதியில் ஒரு வாசகர் இது குறித்து எழுதி இருந்தார். அவருக்கு தெரிந்த, மிகவும் படிப்பறிவில்லாத ஒருவன், தனக்கு குறைந்த சம்பளம் இருந்தாலும், பெண்கள் கிடைப்பார்கள் என்ற ஆசையில், இந்த விளம்பரங்களை நம்பி பல நூறு ரூபாய்களை இந்த சாதனங்களில் செலவு செய்ததாக கூறினார். இப்படி மக்களின் வக்கிர எண்ணங்களை தூண்டி விட்டு பணம் பார்க்கும் வேலையை சின்ன மற்றும் பெரிய திரைகளில் செய்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 9ஆம் / 10ஆம் வகுப்பு படிக்கும் (விடலை) சிறுவன் கூட "டேய்!! அது என்னோட பிகர்-டா!! ..." என்று கூறுவதை பெருமையாக நினைக்கும் அளவிற்கு நமது சமுதாயம் சீழ்பட்டு போய்விட்டது.

திருமணமான ஆண்கள் கூட, உடலுறவு கொள்வது என்பது தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஒரு செயலாகவே பார்கிறார்கள். ஒரு மனைவி உடலுறவுக்கு அழைத்தால், அவள் மீது சந்தேகம் கொள்வது (அ) அவளை 'தவறாக' நினைப்பது என்பது பொதுவாக நடக்கிறது. 'எனக்கு' எப்பொழுது தேவையோ அப்பொழுது 'நான் அழைப்பேன்' - நீ வந்தே தீர வேண்டும் என்பதே பெரும்பாலானவரின் எண்ணம். உண்மையான பாலியல் கொடுமைகளின் அளவுகோட்டில் பார்த்தால், இந்த திருமணமான உறவுகளுமே கற்பழிப்புகள் தான்!!! 

இந்த "நான் அழைத்தால், நீ வரவேண்டும்" என்ற எண்ணத்தினால், திருமணமான குடும்பத்திற்குள் பெண்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் செயல்களில் பல ஆண்கள் ஈடு படுகிறார்கள். இந்த எண்ணங்கள், வெளி உலகில் வரும்போது வன்முறையாகவும், வக்கிரமான பாலியல் வன்செயலாகவும் வடிவெடுக்கிறது. சில நாட்கள் முன்பு, தனது காதலிற்கு ஒத்துக்கொள்ளாத ஒரு பெண்ணின் முகத்தில் திராவகம் வீசினான் ஒருவன். மற்றும் பலர் இது போன்ற கற்பழிப்புகளில் ஈடுபடுகிறார்கள்.

இவற்றின் தீர்வுதான் என்ன? ஒரு வேலை சரியான முறையில் அளிக்கப்படும் பாலியல் கல்வி நன்மை பயக்குமா?? பல நேரங்களில், மாணவிகளிடம் வன்செயலில் ஈடுபடும் ஆசிரியர்களை பற்றி கேள்வி படுகிறோம். இவர்கள் திருந்தாத வரை பாலியல் கல்வியும் தவறாகத்தான் போகும். கொடுமை செய்யப்படும் சிறுமிகள் / பெண்கள் கூட, அச்சத்தால் இதை மறைக்கிறார்கள். பெற்றோர்கள் அனைவரும் மனம் வைத்தால் ஒரு வேளை விடியல் பிறக்கலாம்.

செய்வோமா???? 

Tuesday, November 13, 2012

Is there any shame left!!!

This is English version of my previous Tamil post. "Nobody has shame..." wrote the great Tamil movie lyricist Kannadasan. This aptly applies to the Indian media behavior. Today a single family is ruling our country for more than 60 years and looting us to the core. Lakhs and Crores are getting meaningless in front of the Himalayan scam that's going around. But media would never question these crooks. Here are some excerpts:

1. Fact: First son-in-law twisting the system and favoring DLF (they got commonwealth contracts as well, something that is never reported in mainstream media)
Media: Karan Thapar was vehemently questioning .... not the corrupt, but the person who exposed it. Of course, our power broker Burkha was conspicuously quiet. Of course, they have to do something for the biscuits that are being thrown to them


2. Fact: Minister is involved in 71-lakh scam (that too swindling handicapped people's money)
Media: They were reporting it until Son-in-Law's scam was forgotten. After that, just keep quiet of course...


3. Fact: Narendra Modi commented (albeit coarsely) about 50-cr girl friend
Media: All anger was drawn against Mr. Modi (rightly so...). But no one questioned why the minister was let off in a scam where free money flowed through his (then) girlfriend. In fact, the media was so engrossed in Mr. Modi's comment that they were comparing this with Manu smriti etc. and as if this nation always treated their women badly. Is there any word on the Mullahs who are protesting against women entering the Mosques???

The mainstream Indian media has gone spineless. They are now wagging their tails for their biscuit throwing masters. Are they going to care about the nation???

NOTE: I am an frustrated Indian. I am irritated at people looting money and keeping more than 60% of population in poverty. I am aghast at media being a silent partner (or are they actual business partners of these crooks as well?). Call me an "Internet Hindu" if you want - as the pseudo-secularist Sagarika would like to term us, but let someone legitimately prove that my concerns are wrong.

Sunday, November 11, 2012

யாருக்கும் வெட்கமில்லை !!!

" ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை"

யாரை நினைத்து இந்த வரிகளை கவியரசர் கண்ணதாசன் எழுதினாரோ தெரியவில்லை. நமது இந்திய மீடியாக்களுக்கு இது மிகவும் பொருந்தும். இன்று இந்தியாவில் வரலாறு காணாத ஊழல் பொங்கி வழிகிறது. ஒரு குடும்பம் 60 வருடங்களாக நம்மை ஆண்டு / கொள்ளை அடித்து வருகிறது.  அந்த முதல் / முதலை குடும்பத்தை கேட்க நாதியில்லை.

1. நடந்தது:  குடும்ப மாப்பிள்ளை தன் பங்கிற்கு ஊழலை தொடங்கி உள்ளார். 

நமது மீடியா செய்தது என்ன?: ஊழலை வெளியிட்டவரை தன் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் கரன் தாபர். முடிந்த வரை முதலை குடும்பத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார், இந்த ரொட்டி துண்டிற்கு வாலை ஆட்டும் தாபர் அவர்கள். முன்பு புரோக்கர் வேலை செய்த பர்கா தத் (NDTV) வாயை கூட திறக்கவில்லை.

2. நடந்தது: 71 லக்ஷம் ஊழல் செய்த மத்திய அமைச்சர்

நமது மீடியா செய்தது என்ன?: மாப்பிள்ளையை காப்பாற்றும் வரை அமைச்சர் பெயர் அடி பட்டது. பின்பு அம்பேல் ஆனது.

3. நடந்தது: IPL டீம்-ல் மத்திய அமைச்சரின் (அந்நாள்) தோழி கோடி கணக்கில் இலாபம் பெற்றார். பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின்பு அவர் மீண்டும்  அமைச்சர் ஆகிறார். இதை மோடி கண்ணியம் அற்ற மொழியில்  கிண்டல் செய்கிறார்.

நமது மீடியா செய்தது என்ன?: மோடியின் கண்ணியமற்ற முறையை சாடிய மீடியா, IPL ஊழலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த எலும்பிற்கு வாலாட்டும் முதுகெலும்பில்லாத மீடியாவா இந்தியாவின் நன்மையை நினைக்க போகிறது???

Monday, August 20, 2012

Celestial Wedding in Plano!!!

Dear All,

May, this year Tirumala Thirupathi Devasthanam (TTD) had arranged for Lord Srinivasa Thirukalyana Utsavam in US. We, the Plano-vasis had the pleasure of watching this Celestial Wedding. It was held in Dr. Pepper Arena. As the readers would know, Kalyana Utsavam in Thirupathi is almost a daily affair. The exact ceremony (and more) were repeated here as well. TTD had arranged for the idols from Thirupathi temple to be bought over to US for this  function. Overall it was a great occasion and here's a summary of it with some pictures that I had taken during this function.

TTD Wedding - Thirumala Priest
with the deities
Suprabatham:
The day started at around 8am with recital of Venkatesa Suprabatham and waking up of the deities. The priests from Tirupathi were joined by local priests and recited the composition of Sri Prathivathi Bhayankaram Annan Swamigal. After the Suprabatham, we had the Deeparaadhana. 



Thomala Seva & Archana:
Suprabatham was followed by Thomala Seva, where the lord is garlanded with flowers. The original Tamil name for this is தோள் மாலை Seva (Shoulder length Garland Seva), which later changed into Thomala Seva. This sampradayam (tradition) was initiated by Swami Ramanuja. 

Archana seva followed this. The priests recited the 108 holy names of the lord and goddess Lakshmi. This was followed by Deeparadhana.

The main event:
Hanuman Temple Kalyana Utsavam
The next event was the wedding. Both bride and groom were placed facing each other, separate by a veil. The process was very similar to Andhra style of wedding. All attendees did the Sankalpam with our gothram etc. We had the மாலை மாற்றல் (exchanging the garlands by the bride and groom). This was followed by Maangalya pooja (worshiping goddess Lakshmi in the form of தாலிக்கொடி). Isn't it interesting to note that Goddess Lakshmi is worshiped in her own marriage!!! I guess this is what Kamban referred when he said,

மான் அணி நோக்கினார் தம் 
             மங்கல கழுத்துகேல்லாம் 
தான் அணியான போது 
             தனக்கு அணி யாது மாதோ!!


TTD Kalyana Utsavam - Divine Parents
And then the grand finale....Lord Srinivasa tied the Maangalya Sutra to both Sridevi and Bhoodevi naachiyaars. Given that our father and mother (Lord Srinivasa, Mother Lakshmi and Bhoomadevi) are going to be in a happy mood, we fell at their feet and got their blessings and washed away our generations of sins.


Hanuman Temple - Divine Parents
Some of us are lucky to watch our parents' wedding in the form of 60th or 80th birthday celebrations of our father. However, such celestial weddings are the eternal parents' wedding that we can watch, enjoy and benefit. Let us pray Lord Srinivasa, Goddess Lakshmi and Goddess Bhoomadevi to bless us with good health and divine knowledge.


NOTE: I started this blog in May, when we had the TTD organized Srinivasa Kalyana Utsavam. Given my 'blogging speed', I attended another Srinivasa Thirukkalyanam, in August '12. This time it was in the KaryaSiddhi Anjaneyar temple in Frisco. Sharing pictures from both the weddings.