" ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை"
யாரை நினைத்து இந்த வரிகளை கவியரசர் கண்ணதாசன் எழுதினாரோ தெரியவில்லை. நமது இந்திய மீடியாக்களுக்கு இது மிகவும் பொருந்தும். இன்று இந்தியாவில் வரலாறு காணாத ஊழல் பொங்கி வழிகிறது. ஒரு குடும்பம் 60 வருடங்களாக நம்மை ஆண்டு / கொள்ளை அடித்து வருகிறது. அந்த முதல் / முதலை குடும்பத்தை கேட்க நாதியில்லை.
1. நடந்தது: குடும்ப மாப்பிள்ளை தன் பங்கிற்கு ஊழலை தொடங்கி உள்ளார்.
நமது மீடியா செய்தது என்ன?: ஊழலை வெளியிட்டவரை தன் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் கரன் தாபர். முடிந்த வரை முதலை குடும்பத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார், இந்த ரொட்டி துண்டிற்கு வாலை ஆட்டும் தாபர் அவர்கள். முன்பு புரோக்கர் வேலை செய்த பர்கா தத் (NDTV) வாயை கூட திறக்கவில்லை.
2. நடந்தது: 71 லக்ஷம் ஊழல் செய்த மத்திய அமைச்சர்
நமது மீடியா செய்தது என்ன?: மாப்பிள்ளையை காப்பாற்றும் வரை அமைச்சர் பெயர் அடி பட்டது. பின்பு அம்பேல் ஆனது.
3. நடந்தது: IPL டீம்-ல் மத்திய அமைச்சரின் (அந்நாள்) தோழி கோடி கணக்கில் இலாபம் பெற்றார். பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின்பு அவர் மீண்டும் அமைச்சர் ஆகிறார். இதை மோடி கண்ணியம் அற்ற மொழியில் கிண்டல் செய்கிறார்.
நமது மீடியா செய்தது என்ன?: மோடியின் கண்ணியமற்ற முறையை சாடிய மீடியா, IPL ஊழலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த எலும்பிற்கு வாலாட்டும் முதுகெலும்பில்லாத மீடியாவா இந்தியாவின் நன்மையை நினைக்க போகிறது???
No comments:
Post a Comment